2009 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதியன்று, முதல் உலக நிமோனியா தினம் அனுசரிக்கப் பட்டது.
நிமோனியா என்பது குணப்படுத்தக்கூடிய நோயாகும், இருப்பினும் உலகம் முழுவதும் ஒவ்வொரு 20 வினாடிக்கும் ஒரு குழந்தை உயிரிழக்கிறது.
இத்தினமானது நோய், அதன் அறிகுறிகள் மற்றும் சாத்தியமான சிகிச்சை வாய்ப்புகள் பற்றி பொதுமக்களுக்குக் கற்பிப்பதற்கான ஒரு குறிப்பிடத்தக்க தளத்தை வழங்கச் செய்கிறது.
இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, “ஒவ்வொரு சுவாசமும் கணக்கில் கொள்ளப் படுகிறது: நிமோனியாவை அதன் தோற்றப் பாதையிலேயே நிறுத்துதல்” என்பதாகும்.