TNPSC Thervupettagam

உலக நிம்மோனியா தினம் – நவம்பர் 12

November 14 , 2021 1018 days 338 0
  • இத்தினமானது முதன்முதலில் 2009 ஆம் ஆண்டில் ‘Stop Pneumonia Initiative’ மற்றும் சிறார் நிமோனியாவிற்கு எதிரான ஒரு உலகளாவியக் கூட்டணி ஆகியவற்றால் நிறுவப் பட்டு அனுசரிக்கப்படுகிறது.
  • Stop Pneumonia என்ற முன்னெடுப்பானது ஒரு பொது தனியார் கூட்டிணைவான ‘Every Breath Counts’ என்ற கூட்டணியினால் இயக்கப்படுகிறது.
  • நிம்மோனியா என்பது 5 வயதிற்குட்பட்டக் குழந்தைகளைத் தாக்கும் ஒரு கொடிய நோய் ஆகும்.
  • இது பொதுவாக வைரஸ் அல்லது பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு கடுமையான சுவாசத் தொற்றாகும்.
  • ஒவ்வொரு 39 வினாடிக்கும் ஒரு குழந்தையானது நிம்மோனியாவால் இறப்பதாக ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியமானது கூறுகிறது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Stop Pneumonia, Every Breath Counts” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்