எரிசக்தி மற்றும் வளங்கள் கல்வி நிறுவனத்தின் (TERI) 22வது உலக நிலையான மேம்பாட்டு உச்சி மாநாடு (WSDS) ஆனது புது டெல்லியில் நடைபெற்று வருகிறது.
இந்த உச்சி மாநாட்டின் விவாதங்களில், கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளச் செய்வதற்காக வேண்டி நிலையான மேம்பாடு மற்றும் பருவநிலை நெகிழ்திறன் ஆகியவற்றினை நெறிப்படுத்தச் செய்தல் என்ற முதன்மைக் கருத்துருவின் மீது கவனம் செலுத்தப் பட்டது.
2022 ஆம் ஆண்டானது ஒரு முக்கியமானச் சாதனையினைக் குறிக்கிறது.
1972 ஆம் ஆண்டு ஸ்டாக்ஹோம் மாநாடு என்று பிரபலமாக அழைக்கப்படும் மனித சுற்றுச்சூழல் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டின் 50 ஆண்டுகள் நிறைவினை இது குறிக்கிறது.