நிலையானப் போக்குவரத்து என்பது ஆற்றல்-திறன் மிக்க, குறைந்த அல்லது சுழிய அளவு உமிழ்வு மற்றும் மலிவு விலையிலான போக்குவரத்து முறைகளின் பெரும் பயன்பாட்டை உள்ளடக்கியது.
இதில் உடலியியல் இயக்கங்களால் இயக்கப்படும் மிதிவண்டிகள் முதல் மின்சார ஸ்கூட்டர்கள், பைக்குகள் மற்றும் கார்கள் வரையிலான பல்வேறு வாகனங்களின் பயன்பாடும், அத்துடன் உயிரி டீசல், எத்தனால் மற்றும் ஹைட்ரஜன் போன்ற மாற்று எரிபொருட்களின் பயன்பாடும் அடங்கும்.
இந்த முன்னெடுப்பானது புவிக் கோள் மற்றும் அதன் வளங்களின் ஆற்றல் வளங் காப்பு மற்றும் பாதுகாப்பிற்கு உதவும் போக்குவரத்து முறைகளை கொண்டாடுகிறது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபை (UNGA) ஆனது 2023 ஆம் ஆண்டு மே 16 ஆம் தேதியன்று இந்தத் தினத்தினை அறிவித்தது.