TNPSC Thervupettagam

உலக நீடித்த வளர்ச்சிக்கான மாநாடு - 2018

February 17 , 2018 2346 days 734 0
  • உலக நீடித்த வளர்ச்சிக்கான மாநாட்டின் (World Sustainable Development Summit) முதல் பதிப்பு இவ்வாண்டு புதுதில்லியில் நடத்தப்பட உள்ளது.
  • உலக நீடித்த வளர்ச்சி மாநாடானது ஆற்றல் மற்றும் வளங்கள் நிறுவனத்தினால் (The Energy and Resources Institute-TERI) நடத்தப்படும் முக்கிய மன்றமாகும்.
  • 2018-ஆம் ஆண்டிற்கான உலக நீடித்த வளர்ச்சி மாநாட்டின் கருத்துரு “நெகிழ்திறனுடைய கிரகத்திற்காக கூட்டிணைதல் “ (Partnership for Resilient Planet).
  • நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதற்குத் தேவையான நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்களைக் காட்சிப்படுத்துவதற்காக இந்த மாநாட்டில் “Greenovation“ எனும் கண்காட்சி நடத்தப்பட உள்ளது.
  • நீடித்த வளர்ச்சி, ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் துறைகளில் சேவையாற்றி வரும் உலகத் தலைவர்கள் மற்றும் சிந்தனையாளர்களை ஒரு பொதுவான மேடையில் ஒருங்கிணைப்பதற்காக இந்த மாநாடு நடத்தப்படுகின்றது.
  • இந்தியா மற்றும் உலகின் தெற்கத்திய நாடுகளின் நீடித்த வளர்ச்சிக்காக ஆராய்ச்சியை மேற்கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்ட முன்னணி சிந்தனைச் சாவடியே (think tank) ஆற்றல் மற்றும் வளங்கள் நிறுவனமாகும்.
  • மாசு உண்டாக்காத பசுமை ஆற்றல் (Clean Energy), நீர் மேலாண்மை, மாசுபாடு மேலாண்மை, நீடித்த வேளாண்மை மற்றும் காலநிலை நெகிழ்வுத் திறன் (climate resilience) ஆகியவற்றை மேம்படுத்துவதே ஆற்றல் மற்றும் வளங்கள் நிறுவனத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்