TNPSC Thervupettagam

உலக நீரிழிவு தினம் 2018 - நவம்பர் 14

November 14 , 2018 2145 days 486 0
  • உலக நீரிழிவு தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
  • 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டிற்கான கருத்துரு - “குடும்பம் மற்றும் நீரிழிவு” என்பதாகும்.
  • இது முதன் முதலில் 1991 ஆம் ஆண்டு சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு (IDF - International Diabetes Federation) மற்றும் உலக சுகாதார நிறுவனம் ஆகியவற்றால் கடைபிடிக்கப்பட்டது.
  • உலக நீரிழிவு தினமானது 2006ல் ஐக்கிய நாடுகளின் அதிகாரப்பூர்வ நாளாக மாற்றப்பட்டது.
  • இது 1922 ஆண்டில் சார்லஸ் பெஸ்ட் உடன் இணைந்து இன்சுலினைக் கண்டறிந்த ஃப்ரெடெரிக் பாண்டிங்கின் பிறந்த நாளை நினைவு கூறுவதற்காக நவம்பர் 14 அன்று அனுசரிக்கப்படுகிறது.
  • நீரிழிவு பற்றிய தீர்மானம் ஐநாவில் நிறைவேற்றப்பட்ட பிறகு இந்த நாளின் பிரச்சாரமானது ஒரு நீலநிற வட்ட இலட்சினையால் பிரதிநிதித்துவப் படுத்தப்படுகிறது. மேலும் இது நீரிழிவு விழிப்புணர்வுக்கான உலகளாவிய சின்னமாகவும் குறிப்பிடப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்