உலக நீரிழிவு தினம் என்பது நீரிழிவு நோயின் மீது கவனத்தைச் செலுத்தும் ஒரு முதன்மையான உலகளாவிய விழிப்புணர்வுப் பிரச்சாரமாகும். இத்தினமானது ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 அன்று அனுசரிக்கப் படுகின்றது.
இது சார்லஸ் பெஸ்டுடன் இணைந்து இன்சுலினைக் கண்டுபிடித்த சர் பெட்ரிக் பாண்டிங்கின் பிறந்த நாளுடன் ஒத்துப் போகின்றது.
உலக சுகாதார அமைப்பு மற்றும் IDF (சர்வதேச நீரிழிவுக் கூட்டமைப்பு - International Diabetes Federation) ஆகியவற்றினால் 1991 ஆம் ஆண்டில் விழிப்புணர்வு தினமாக இந்தத் தினம் தொடங்கப் பட்டது.
இது 2006 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வ ஐக்கிய நாடுகள் தினமாக உருவெடுத்தது.
2019 ஆம் ஆண்டில் இத்தினத்தின் கருப்பொருள், “குடும்பம் மற்றும் நீரிழிவு நோய்” என்பதாகும்.