இந்த நோயைப் பற்றிய பெரு விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் அதன் சரியான மேலாண்மை, அதற்கானச் சிகிச்சை மற்றும் தடுப்பு ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது 1991 ஆம் ஆண்டு சர்வதேச நீரிழிவு நோய்க் கூட்டமைப்பு (IDF) மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றால் நிறுவப்பட்டது.
நீரிழிவு நோய்க்கான ஒரு சிகிச்சையாக விளங்கும் இன்சுலினைக் கண்டறிய உதவிய அறிவியலாளர்களில் ஒருவரான டாக்டர் ஃபிரடெரிக் பான்டிங்கின் பிறந்தநாள் அன்று இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Breaking Barriers, Bridging Gaps” என்பதாகும்.