2003 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் தூய்மையான நீர் அறக்கட்டளை (ACWF) அமைப்பானது இந்த நாளைத் தொடங்கியது.
தொடக்கத்தில், 1972 ஆம் ஆண்டு அமெரிக்க தூய்மையான நீர் சட்டத்தின் நினைவாக அக்டோபர் 18 ஆம் தேதி இதற்காக தேர்வு செய்யப்பட்டது.
ஆனால் இதில் பங்கேற்பாளர்கள் மற்றும் பங்கேற்கும் நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக வேண்டி, இந்தத் தினத்திற்கான அதிகாரப்பூர்வ தேதியானது 2007 ஆம் ஆண்டில் செப்டம்பர் 18 என மாற்றப்பட்டது.
2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, ‘Water for Peace’ என்பதாகும்.
நன்னீர்ப் பயன்பாட்டில் 72% ஆனது வேளாண்மையில் பயன்படுத்தப்படுகிறது.
குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் 80% வேலைகள் ஆனது தண்ணீரைச் சார்ந்து உள்ளன.
2030 ஆம் ஆண்டிற்குள் சுமார் 700 மில்லியன் மக்கள் கடுமையான தண்ணீர் பற்றாக் குறையால் இடம்பெயர்வர்.
2040 ஆம் ஆண்டில், உலகளவில் 4 குழந்தைகளில் 1 குழந்தையானது மிக அதிக நீர் நெருக்கடியில் வாழும்.