நீர் நிலையியல் என்பது பூமியில் இருக்கும் நீர்நிலைகளின் இயற்பியல் அம்சங்களை விவரிக்கும் அறிவியல் ஆகும்.
இது நீர் நிலையியலின் முக்கியத்துவம் மற்றும் நீர் நிலையியல் நிபுணர்களின் வேலை பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது சர்வதேச நீர் நிலையியல் அமைப்பினால் (IHO) தொடங்கப்பட்டு, 2006 ஆம் ஆண்டில் முதன்முதலில் கொண்டாடப்பட்டது.
இந்த நாள் ஆனது 1921 ஆம் ஆண்டில் IHO நிறுவப்பட்டதன் ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Hydrographic Information – Enhancing Safety, Efficiency and Sustainability in Marine Activities" என்பதாகும்.