உலகம் முழுவதும் உள்ள நுகர்வோர் குழுகளுக்கான ஒரு உறுப்பினர் அமைப்பான சர்வதேச நுகர்வோர் அமைப்பால் மேற்கொள்ளப்படும் ஒரு முன்னெடுப்பின் ஒரு பகுதியாக ஒவ்வொரு வருடமும் மார்ச் 15 ஆம் தேதி உலக நுகர்வோர் உரிமைகள் தினமாக அனுசரிக்கப்படுகின்றது.
இத்தினம் ஒவ்வொரு வருடமும் நுகர்வோர் உரிமைகளை அனுசரித்திடவும், ஒவ்வொருவரும் பாதுகாப்பான மற்றும் நீடித்த நிலைத் தன்மை கொண்ட பொருட்கள் மற்றும் சேவைகள் ஆகியவற்றைப் பெற்றிடும் வகையிலான ஒரு உலகினை கட்டமைத்திடவும் வேண்டி அனுசரிக்கப்படுகின்றது.
2019 ஆம் ஆண்டிற்கான உலக நுகர்வோர் தினத்தின் கருத்துருவானது பெருகி வரும் மின்னணுப் பொருட்களின் அபிமானத்தைக் கருத்தில் கொண்டு “நம்பிக்கையான ஸ்மார்ட் கருவிகள்” என்ற வாசகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.