நுகர்வோர்களின் அடிப்படை உரிமைகளை மேம்படுத்துவதற்காகவும், நுகர்வோர்களுக்கு உள்ள அடிப்படை உரிமைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் ஆண்டுதோறும் மார்ச் 15 ஆம் தேதி உலக நுகர்வோர் உரிமைகள் தினம் (World Consumer Rights Day – WCRD) கொண்டாடப்படுகின்றது.
2018 ஆம் ஆண்டிற்கான உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தின் கருத்துரு “டிஜிட்டல் சந்தைகளை கவர்ச்சியுடையதாக உருவாக்குதல்”
முதல் உலக நுகர்வோர் உரிமைகள் தினமானது 1983 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.
உலக நுகர்வோர் உரிமைகள் தினமானது 1962 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்தில் (Congress) நுகர்வோர் பாதுகாப்பு பற்றி ஜான்.எப். கென்னடி ஆற்றிய வரலாற்றுச் சிறப்பு மிக்க உரையை நினைவு கூறுவதற்காக கொண்டாடப்படுகின்றது.
“நுகர்வோர் உரிமைகள்” பற்றி முறையாக விளக்கிய முதல் உலகத் தலைவர் இவரேயாவார்.
இந்தியாவில் டிசம்பர் 24-ஆம் தேதி தேசிய நுகர்வோர் தினம் (National Consumer Day) கொண்டாடப்படுகின்றது. ஏனெனில் இந்நாளில்தான் 1986 ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டமானது (Consumer Protection Act, 1986) குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்றது.