நுகர்வோரின் உரிமைகள் மற்றும் தேவைகள் குறித்து உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்தத் தினமானது அனுசரிக்கப்படுகிறது.
இது நுகர்வோர் உரிமைகளை அங்கீகரித்தல் மற்றும் அவை மதிக்கப்படுவதையும் பாதுகாக்கப் படுவதையும் உறுதி செய்தல் ஆகியவற்றினை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "தூய்மையான ஆற்றல் மாற்றங்களின் மூலம் நுகர்வோருக்கு அதிகாரமளித்தல்" என்பதாகும்.
உலக நுகர்வோர் உரிமைகள் தினமானது, 1962 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் தேதியன்று அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜான் F. கென்னடி அவர்களால் கருத்தாக்கப் பட்டது.
உலக நுகர்வோர் உரிமைகள் தினம் ஆனது முதன்முதலில் 1983 ஆம் ஆண்டில் அனுசரிக்கப் பட்டது.
1986 ஆம் ஆண்டு டிசம்பர் 09 ஆம் தேதியன்று நுகர்வோருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் இந்திய நாடாளுமன்றத்தில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டமானது நிறைவேற்றப் பட்டது.