இது உலகம் முழுவதும் நுரையீரல் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதையும், சிறந்த நுரையீரல் பராமரிப்பு நலனை மேம்படுத்தச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டு அனுசரிக்கப்படுகிறது.
இந்தத் தினமானது ஆரோக்கியமான நுரையீரலின் முக்கியத்துவம் பற்றி எடுத்து உரைக்கவும், நுரையீரல் நோய்களுக்கான காரணங்கள் மற்றும் தடுப்பு முறைகள் பற்றி எடுத்துரைக்கவும் முயல்கிறது.
முதலாவது உலக நுரையீரல் தினம் ஆனது 2018 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது.
இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, “அனைவருக்கும் தடுப்பு முறை மற்றும் சிகிச்சைக்கான அணுகல். ஒருவரும் விடுபட்டு விடக் கூடாது” என்பதாகும்.