உலக சுகாதார அமைப்பு (WHO - World Health Organization), 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதியை உலக நோயாளி பாதுகாப்பு தினமாக அறிவித்துள்ளது.
இந்த நாள் ஆனது நோயாளியின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, சுகாதார நலத்தைப் பாதுகாப்பதில் தங்கள் அர்ப்பணிப்பைக் காட்டும்படி மக்களைக் கேட்டுக் கொள்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
சுகாதாரத்தைப் பெறும் போது “தடுக்கப்படக் கூடிய மருத்துவ விபத்து” காரணமாக நோயாளிகள் இறக்கும் அபாயம் 300ல் 1 என மதிப்பிடப் பட்டுள்ளது.
உலகளவில், பாதுகாப்பற்ற கவனிப்பு காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 134 மில்லியன் எதிர்மறையான நிகழ்வுகள் 2.6 மில்லியன் இறப்புகளுக்குப் பங்களிக்கின்றன.
இந்த ஆண்டின் சர்வதேச தினத்தின் குறிக்கோள் ஆனது “அனைத்து நிலைகளிலும் பாதுகாப்புக் கலாச்சாரம்” என்பதாகும்.