இந்த நாள் உலக சுகாதார அமைப்பினால் (WHO) நிறுவப்பட்டது.
இது நோயாளிகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், உலகளவில் சுகாதாரப் பாதுகாப்பை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
நோயாளியின் பாதுகாப்பு என்பது மருத்துவச் சேவைகளை வழங்கும் போது ஏற்படும் பிழைகள், பாதகமான நிகழ்வுகள் மற்றும் நோயாளிகளுக்கு ஏற்படும் தீங்குகளைத் தடுத்தல் ஆகியவற்றை மையமாகக் கொண்டது.
இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, “நோயாளிகளின் பாதுகாப்பிற்காக நோயாளிகளை ஈடுபடுத்துதல்” என்பதாகும்.