TNPSC Thervupettagam

உலக பண்டக மாநாடு 2018

April 9 , 2018 2295 days 640 0
  • பண்டகப் (Logistic) போக்குவரத்து மற்றும் போக்குவரத்து இணைப்பை அதிகரிப்பதற்காக உலக பண்டக மாநாடு (Global Logistics Summit-GLS) 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 மற்றும் 6 ஆம் தேதியில் புது தில்லியில் நடைபெற்றது.
  • உலக வங்கி குழு (World Bank Group) மற்றும் வர்த்தகம் மற்றும் தொழிற்துறைக்கான இந்தியக் கூட்டமைப்பு  (FICCI- Federation of Indian Chambers of Commerce & Industry) ஆகிய அமைப்புகளுடன் இணைந்து மத்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தின் (Ministry of Commerce & Industry) கீழ் இயங்கும் வர்த்தகத் துறை இந்த மாநாட்டை நடத்தியுள்ளது.
  • பண்டகங்கள் மற்றும் பண்டகப் போக்குவரத்து ஆகியவற்றை அதிகரிப்பது  என்பது மாநிலங்களுக்குள்ளான (intra-state) வர்த்தகப் போக்கு மற்றும் சர்வதேச வர்த்தகப் போக்கு (international trade flows)  ஆகியவற்றினை அதிகரிப்பதற்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
  • இந்தியா தன்னுடைய ஜி.டி.பி-யில் 4 சதவீதத்தை சரக்குப் பண்டகம் மற்றும் போக்குவரத்துத்  துறை மீது செலவிடுகின்றது.
  • 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பண்டகத் (தளவாடத்) துறைக்கு உள்கட்டமைப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்