TNPSC Thervupettagam

உலக பத்திரிக்கை சுதந்திர தினம்

May 2 , 2019 1977 days 551 0
  • ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 05 ஆம் தேதியன்று உலக பத்திரிக்கை சுதந்திர தினம் அனுசரிக்கப்படுகின்றது.
  • இந்த ஆண்டின் கருத்துருவானது, “மக்களுக்கான ஊடகம் : தேர்தல் நேரத்தில் போலித் தகவல் பரப்பப்படும் போது பத்திரிக்கைத் துறை” என்பதாகும்.
  • இந்தக் கருத்துருவானது பின்வருவனவற்றை விவாதிக்கின்றது.
    • தேர்தல் காலத்தில் ஊடகங்களினால் எதிர்கொள்ளப்படும் தற்போதைய சவால்கள்
    • அமைதி மற்றும் சமரச செயல்முறைகளைஅதிகரிப்பதில் ஊடகத்தின் திறன்.
  • யுனெஸ்கோவின் பரிந்துரைகளைத் தொடர்ந்து 1993 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் உலக பத்திரிக்கை சுதந்திர தினமானது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் பறை சாற்றப்பட்டது.
  • மே மாதம் 03 ஆம் தேதியானது விண்ட்ஹூக் பிரகடனத்தின் நினைவு தினமாகும்.
  • உலகெங்கிலும் இந்தத் தினமானது உலக பத்திரிக்கை சுதந்திர தினமாக அனுசரிக்கப் படுகின்றது.
  • விண்ட்ஹூக் பிரகடனம் என்பது 1991 ஆம் ஆண்டில் ஆப்பிரிக்க தினசரி பத்திரிக்கைகளால் அறிவிக்கப்பட்ட பத்திரிக்கை சுதந்திரக் கொள்கைகளின் அறிக்கையாகும்.
தகவல்
  • சர்வதேசப் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பினால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, பத்திரிக்கை சுதந்திரத்தைக் காப்பதற்காக 2018 ஆம் ஆண்டில் 95 பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டனர்.
  • 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து இதுவரை 18 பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
  • “ரிப்போர்ட்டர்ஸ் சன்ஸ் பிராண்டியர்ஸ்” (எல்லைகளைக் கடந்த பத்திரிக்கை நிருபர்கள்) என்ற அமைப்பினால் வெளியிடப்பட்ட பத்திரிக்கை சுதந்திரக் குறியீட்டில் மொத்தமுள்ள 180 நாடுகளில் 140-வது இடத்தில் இந்தியா தரவரிசைப்படுத்தப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்