TNPSC Thervupettagam

உலக பத்திரிக்கை புகைப்பட விருதுகள் 2019

April 15 , 2019 1932 days 596 0
  • அமெரிக்க – மெக்ஸிகோ எல்லைக்கு அருகே உதவியின்றி அழுது கொண்டிருக்கும் குழந்தையின் புகைப்படமானது புகழ்பெற்ற உலக பத்திரிக்கை புகைப்பட விருதை வென்றது.
  • ‘எல்லையில் அழும் பெண்’ எனும் தலைப்பிடப்பட்ட இந்தப் புகைப்படமானது கெட்டி புகைப்பட நிறுவனத்தின்  மூத்த புகைப்படவியல் ஊழியரான ஜான் மூர் என்பவரால் 2018 ஆம் ஆண்டு ஜூன் 12 அன்று எடுக்கப்பட்டது.
  • இந்தப் புகைப்படமானது அமெரிக்காவின் மெக்கலென் எல்லைப்புற அதிகாரிகளால் சோதனையிடப்பட்ட சான்ட்ரா சான்செஸ் எனும் தாய்க்கு அருகில் நின்று அழுது கொண்டிருக்கும் அவரின் குழந்தையான யானெலா சான்செஸ்-ஐ காட்டுகிறது.
  • இந்த விருதானது நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது.
  • 1995 ஆம் ஆண்டு முதல் உலக பத்திரிக்கைப் புகைப்படப் போட்டியானது கடந்த ஆண்டில் பார்வையிடக்கூடிய பத்திரிக்கையியலில் சிறந்த பங்களிப்பைச் செய்த புகைப்படத்தின் புகைப்பட நிபுணர்களை அங்கீகரிக்கிறது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்