TNPSC Thervupettagam

உலக பத்திரிக்கைச் சுதந்திரக் குறியீடு 2018

May 4 , 2018 2301 days 655 0
  • எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் (Reporters Without Borders) அமைப்பால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள 2018-ஆம் ஆண்டிற்கான உலக பத்திரிக்கைச் சுதந்திரக் குறியீட்டில் (World Press Freedom Index -WPFI) 2017 ஆம் ஆண்டின் பத்திரிக்கைச் சுதந்திரத்தினுடைய நிலையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட உலகம் தழுவிய கணக்கெடுப்பில் 180 நாடுகளுள் இந்தியா 138-வது இடத்தைப் பிடித்துள்ளது.

  • 2017-ஆம் ஆண்டிற்கான பத்திரிக்கைச் சுதந்திரக் குறியீட்டில் 136 வது இடத்தைப் பிடித்திருந்த இந்தியா இந்த ஆண்டு இரண்டு இடம் பின்தங்கி 138-வது இடத்தை பிடித்துள்ளது.
  • 2018-ஆம் ஆண்டிற்கான பத்திரிக்கைச் சுதந்திரக் குறியீட்டில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நார்வே முதலிடம் வகிக்கின்றது. சுவீடன் இரண்டாவது இடத்திலும், நெதர்லாந்து மூன்றாவது இடத்திலும், பின்லாந்து நான்காவது இடத்திலும், சுவிட்சர்லாந்து ஐந்தாவது இடத்திலும் உள்ளது.
  • பத்திரிக்கை சுதந்திரத்தின் மீது மிகவும் அடக்கு முறை கொண்ட (most repressive country) நாடாக வட கொரியா தொடர்ந்து நீடிக்கின்றது. வடகொரியாவைத் தொடர்ந்து எரித்திரியா (Eritrea), துர்க்மெனிஸ்தான், சிரியா மற்றும் சீனா ஆகியவை உள்ளன.
  • இந்தக் குறியீட்டில் சீனாவினுடைய தரவரிசையில் எந்த மாற்றமும் நிகழாமல் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக 175-வது இடத்தில் உள்ளது.
  • 2002-ஆம் ஆண்டிலிருந்து எல்லைகள் அற்ற பத்திரிக்கையாளர்கள் அமைப்பினால் ஆண்டுதோறும் உலக பத்திரிக்கைச் சுதந்திரக் குறியீடு வெளியிடப்படுகின்றது.
  • உலக பத்திரிக்கைச் சுதந்திரக் குறியீடானது உலகின் 180 நாடுகளில் ஊடகங்களினுடைய சுதந்திரத்தின் அளவினை (level of media freedom) அளவிடுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்