இந்த நாள் ஆனது பனிச்சிறுத்தைகளைக் கொண்டாடுவதையும் அந்த இனங்கள் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
பனிச் சிறுத்தைகளைப் பாதுகாப்பதற்கான பிஷ்கெக் பிரகடனமானது 2013 ஆம் ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதியன்று 12 நாடுகளால் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
இந்தியா, நேபாளம், பூடான், சீனா, மங்கோலியா, ரஷ்யா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகியவை இந்த 12 நாடுகளாகும்.