பார்வைத் திறனற்றவர்கள் மற்றும் பகுதியளவு பார்வைத் திறனற்றவர்களுக்கான தகவல் தொடர்பு சாதனமாக பிரெய்லி விளங்குவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
ப்ரெயிலி என்ற முறையின் கருத்தாக்கத்தினை உருவாக்கிய பெரும் தொலைநோக்கு பார்வையாளரான லூயிஸ் பிரெயிலுக்கு கௌரவமளிக்கும் விதமாக இந்தத் தினம் அனுசரிக்கப்படுகிறது.
1829 ஆம் ஆண்டில், பிரெய்லியில் எழுதப்பட்ட தனது முதலாவது புத்தகத்தினை அவர் வெளியிட்டார்.
பிரெய்லி முறையானது இறுதியாக 1854 ஆம் ஆண்டில் பாரீஸ் நகரில் உள்ள ஒரு நிறுவனத்தினால் ஏற்றுக் கொள்ளப் பட்டது.