TNPSC Thervupettagam

உலக பிரெய்லி தினம் – ஜனவரி 04

January 5 , 2022 965 days 476 0
  • பிரெய்லி என்பது ஒவ்வொரு எழுத்தினையும் எண்ணினையும், இசை, கணிதம் மற்றும் அறிவியல் குறியீடுகளையும் குறிப்பிடுவதற்காக 6 புள்ளிகளைப் பயன்படுத்தி, அகர வரிசையையும் எண்ணியல் குறியீடுகளையும் தொட்டுணரக்கூடிய வகையிலான ஒரு பிரதியாகும்.
  • பிரெய்லி முறையானது (19 ஆம் நூற்றாண்டில் இந்த முறையைக் கண்டறிந்த பிரான்சு நாட்டு விஞ்ஞானியான லூயிஸ் பிரெய்லியின் பெயரே இதற்குச் சூட்டப்பட்டது) காணும் மாதிரியிலான ஒரு வகையில் அச்சிடப்பட்ட புத்தகங்களையும் புத்தக வெளியீடுகளையும் படிப்பதற்காக வேண்டிப் பார்வையற்றவர்களாலும் பகுதியளவுப் பார்வையற்றவர்களாலும் பயன்படுத்தப் படுகிறது.
  • பிரெய்லி முறை நடைமுறைக்கு வருவதற்கு முன்பு, வாசிப்புப் பயன்பாட்டிற்காக வேண்டி ஹவூய் எனும் முறையினைப் பார்வையற்றவர்களும் பகுதியளவுப் பார்வைக் குறைபாடு உடையவர்களும் பயன்படுத்தி வந்தனர்.
  • இந்தத் தினத்திற்கான தேதியானது 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் பிரகடனத்தின் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • இத்தினம் லூயிஸ் பிரெய்லியின் பிறந்தநாள் நிறைவினைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்