ஒவ்வொரு வருடமும் மே 31 அன்று உலகம் முழுவதும் உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.
உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பினர் நாடுகள் 1987ம் ஆண்டில் உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை உருவாக்கினர்.
2018ம் ஆண்டிற்கான உலக புகையிலை எதிர்ப்பு தினத்தின் கருத்துரு - புகையிலையும் இருதய நோய்களும்.
இரண்டாவது உலக வயது வந்தோருக்கான புகையிலை ஆய்வு அறிக்கை (Global Adult Tobacco Survey-2) இந்தியா தனது ஒட்டு மொத்த மக்கள் தொகையில்6 சதவிகித மக்கள் புகையிலையின் ஏதாவது ஒரு வடிவத்திற்கு அடிமைப்பட்டு உலகில் அதிக மாக இரண்டாவது புகையிலை பொருட்களை உட்கொள்பவர் என்ற நிலையில் இருப்பதாக கூறுகின்றது.