ஒவ்வொரு ஆண்டும் மே 31 அன்று உலக சுகாதார நிறுவனம் மற்றும் அதன் சர்வதேச பங்காளர்கள் இணைந்து உலக புகையிலையற்ற தினத்தை (WNTO - World No Tobacco Day) அனுசரிக்கின்றனர்.
இந்த வருடாந்திரப் பிரச்சாரம் தீங்கு விளைவிக்கக்கூடிய மற்றும் உயிரிழப்பை உண்டாக்கும் புகையிலை குறித்தும் , புகைப்பிடிப்பால் இரண்டாம் நிலை பாதிப்புக்கு உள்ளாகும் புகைப்பிடிக்காதவர்கள் (second-hand smoke exposure) குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு வாய்ப்பாக அமைகின்றது.
எந்தவொரு வகையிலும் புகையிலையை பயன்படுத்துவது தீங்கு என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது.
2019 ஆம் ஆண்டின் கருத்துரு : “புகையிலை மற்றும் நுரையீரல் ஆரோக்கியம்”