உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினம் – ஏப்ரல் 23
April 28 , 2018 2402 days 796 0
உலக மக்களிடையே புத்தக வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கவும், புத்தகங்களின் வெளியீடு மற்றும் பதிப்புரிமையை (copyright) மேம்படுத்தவும் ஆண்டுதோறும் உலகம் முழுவதும் ஏப்ரல் 23-ஆம் தேதி உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினம் (World Book and Copyright Day) கொண்டாடப்படுகின்றது.
ஆண்டு தோறும் ஏப்ரல் 23 ஆம் தேதி அன்று யுனெஸ்கோ (UNESCO) அமைப்பும், பிற சர்வதேச அமைப்புகளும் உலகின் ஏதேனும் ஒரு பகுதியை உலக புத்தக தலைமையகமாக (World Book Capital) ஓர் ஆண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கும்.
இந்த வகையில், யுனெஸ்கோ அமைப்பானது இந்த ஆண்டு கிரிஸ் நாட்டின் தலைநகரான ஏதென்ஸ் (Athens) நகரை 2018-ஆம் ஆண்டிற்கான உலக புத்தக தலைநகராக (World Book Capital for 2018) அறிவித்துள்ளது.
உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினத்தை ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார நிறுவனம் (UNESCO) தோற்றுவித்தது. 1995 ஆம் ஆண்டு இத்தினம் முதன் முறையாக கொண்டாடப்பட்டது.