உலக பூமி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22 ஆம் நாள் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் நாள் அன்று கொண்டாடப்பட்ட முதல் உலக பூமி தினமானது சுற்றுச் சூழலுக்கு ஏற்பட்ட சேதத்திற்கு எதிராக 22 மில்லியன் அமெரிக்கர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தினத்தைக் குறிக்கும் நாளாகும்.
நமது எதிர்கால தலைமுறையினருக்காக இந்தக் கோளினை ஒரு சிறந்த இடமாக மாற்றுவதற்கு நமது சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதற்கும் பேணிக் காப்பதற்குமான தேவையை நமக்கு நினைவூட்டுவதற்காக இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
2019 ஆம் ஆண்டில் கருத்துருவானது, “நமது இனங்களைப் பாதுகாப்போம்” என்பதாகும். உலகம் முழுவதிலும் விரைவாக அழிந்துவரும் இனங்களின் மீது கவனத்தினை ஈர்ப்பதே இதன் நோக்கமாகும்.