TNPSC Thervupettagam

உலக பூர்வகுடி மக்களின் சர்வதேச தினம் – ஆகஸ்ட் 09

August 9 , 2019 1937 days 694 0
  • ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 09 அன்று உலக பூர்வகுடி மக்களின் சர்வதேச தினம் அனுசரிக்கப் படுகின்றது.
  • இந்தத் தினமானது பூர்வகுடி மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற உலகப் பிரச்சினைகளை தீர்ப்பதற்குப் பூர்வகுடி மக்கள் ஆற்றிய பங்களிப்புகளை அங்கீகரிப்பதையும் நோக்கங்களாகக் கொண்டுள்ளது.
  • இது 1994 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையினால் முதன்முறையாக அறிவிக்கப்பட்டது.
  • உலக மக்கள் தொகையில் 5 சதவிகிதத்திற்கும் குறைவாக பூர்வகுடி மக்கள் உள்ளனர். ஆனால் ஏழை மக்களில் 15 சதவிகிதம் நபர்கள் பூர்வகுடி மக்களாக உள்ளனர்.
  • உலகில் உள்ள மதிப்பிடப்பட்ட 7000 மொழிகளில் பெரும்பான்மையான மொழிகளை இவர்கள் பேசுகின்றார்கள். இவர்கள் வெவ்வேறான 5000 கலாச்சாரங்களைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்றனர்.
  • 2019 ஆம் ஆண்டை சர்வதேச பூர்வகுடி மொழிகள் ஆண்டாக குறிக்கப்படுவதன் காரணமாக இந்த ஆண்டின்  அனுசரிப்பானது (2019) பூர்வகுடி மக்களின் மொழிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்