ராஸ் தீவில் உள்ள மெக்முர்டோ நிலையம் என்ற அமெரிக்க ஆராய்ச்சி மையத்தில் இந்த நாள் உருவாக்கப்பட்டது.
இந்த நிலையத்தில் உள்ள அறிவியலாளர்கள், அடேலி பென்குயின்கள் ஒவ்வோர் ஆண்டும் இதே நாளில் தான் வடக்கு நோக்கி இடம்பெயரத் தொடங்குவதைக் கண்டு அறிந்தனர்.
இந்த இடம் பெயர்வினைக் கொண்டாடச் செய்வதற்காகவும், அதன் இருப்பிடத்தில் பென்குயின்களின் எண்ணிக்கை குறைந்து வருவதைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் இந்த நாளை உருவாக்க அவர்கள் முடிவு செய்தனர்.