ஆண்டுதோறும் உலகம் முழுவதும் ஜூன் 8-ஆம் தேதி உலகப் பெருங்கடல்கள் தினம் கொண்டாடப்படுகின்றது.
பெருங்கடல்கள் தொடர்பாக சர்வதேசச் சமுதாயம் எதிர்கொள்ளும் நடப்புச் சவால்களைப் பற்றி உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சர்வதேசப் பெருங்கடல்கள் தினம் கொண்டாடப்படுகின்றது.
மேலும் இத்தினமானது உலகினுடைய பெருங்கடல்களைப் பாதுகாக்கவும், அவற்றினை கவுரப்படுத்தி அவற்றிற்கு மரியாதை செலுத்திடவும் தனித்துவமான வாய்ப்புகளை வழங்க முனைகின்றது.
2018-ஆம் ஆண்டிற்கான உலக பெருங்கடல்கள் தினத்தின் கருத்துரு “பிளாஸ்டிக் மாசுபாட்டைத் தடுத்தல் மற்றும் ஆரோக்கியமான பெருங்கடலுக்காக தீர்வைகளை ஊக்குவித்தல்” (Preventing plastic pollution and encouraging solutions for a healthy ocean).
இக்கருத்துருவானது 2018-ஆம் ஆண்டின் உலக சுற்றுச் சூழல் தினத்தின் கருத்துருவுடன் ஒருங்கமைகின்றது. 2018-ஆம் ஆண்டின் உலக சுற்றுச் சூழல் தினத்தின் கருத்துருவானது “பிளாஸ்டிக் மாசுபாட்டைத் தோற்கடித்தல்” (Beat Plastic Pollution).
ஐ.நா. பொது அவையானது தீர்மானத்தை நிறைவேற்றியதன் மூலம் 2008-ஆம் ஆண்டு ஜூன் 8 ஆம் தேதியை உலக பெருங்கடல்கள் தினமாக அறிவித்தது.