ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 ஆம் தேதி சர்வதேச இனப் பாகுபாடு ஒழிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.
1960 ஆம் ஆண்டில் இந்த நாளில் தென் ஆப்பிரிக்காவில் சார்பேவில்லியில் “பாஸ் சட்டங்கள்” என்ற இனப் படுகொலைக்கு எதிராக அமைதியாக போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல் துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் 69 மக்கள் உயிரிழந்தனர்.
1966 ஆம் ஆண்டில் ஐ.நா பொதுச் சபை இத்தினத்தை பிரகடனப்படுத்திய போது அனைத்து வகையான இனப் பாகுபாட்டையும் அகற்றுவதற்கான தனது முயற்சிகளை இரட்டிப்பாக்க சர்வதேச சமூகத்திற்கு அழைப்பு விடுத்தது.
2019 ஆம் ஆண்டு இத்தின அனுசரிப்பின் கருத்துரு, “உயர்ந்து வரும் தேசியவாதக் கொள்கை மற்றும் தீவிர மேலாதிக்கக் கருத்தாக்கங்களைக் குறைத்தல் மற்றும் எதிர்த்தல்” என்பதாகும்.