TNPSC Thervupettagam

உலக பொருளாதார கண்ணோட்டம்

November 21 , 2017 2588 days 929 0
  • உலக நாணய நிதியத்தால் [IMF – International Monetary Fund] 2017 ஆம் ஆண்டிற்கான உலக பொருளாதார கண்ணோட்ட அறிக்கை (World Economic Outlook Report ) வெளியிடப்பட்டுள்ளது.
  • ஆண்டிற்கு இருமுறை (Biannually)  வெளியிடப்படும் இந்த அறிக்கையானது 200 நாடுகளை அவற்றின்  பொருள் வாங்குத்திறன் சமநிலையினை (PPP– Purchasing Power Parity) ஆதாரமாகக்   கொண்டு தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (Per Capita GDP) அடிப்படையில் தரவரிசைப்படுத்துகின்றது.
  • தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையின்படி, இந்தியா தனிநபர் உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் ஒரு இடம் முன்னேறி 126-வது இடத்தை அடைந்துள்ளது.
  • இருப்பினும் இவ்வறிக்கைப்படி, பிரிக்ஸ் நாடுகளுள் இந்தியா கடைசி இடத்தில் உள்ளது.
  • IMF தரவுகளின் அடிப்படையில் கத்தார் தொடர்ந்து  உலக பணக்கார நாடாக  திகழ்ந்து  வருகின்றது.
PPP – Purchasing Power Parity
  • ஒரு நாட்டின் பணமானது மற்றொரு நாட்டில் மாற்றப்படத் தேவையான நாணய மாற்ற விகிதமே பொருள் வாங்குத்திறன் சமநிலை (PPP) எனப்படும்.
  • இது உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளின் வருமான அளவை பிற நாடுகளுடன் ஒப்பிட பயன்படும்.
  • நாணய மாற்று விகிதத்தை (Exchange Rate) கணக்கில் கொள்ளும் போது, ஒரே பொருளின் நுகர்வின் மீதான செலவு இரு நாடுகளிலும் ஒன்றாக இருப்பதை உறுதி செய்ய இவை உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்