உலக பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) மேலாண்மை குழுவிற்கு சரிதா நய்யார் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்சமயம் உலகப் பொருளாதார மன்றத்தின் தலைமை இயக்க அதிகாரியாக உள்ள நய்யார், நான்காவது தொழிற் புரட்சி பிணையத்திற்கான மன்றத்தின் மையத்தினுடைய சர்வதேச விரிவாக்கத்திற்குத் தலைமை தாங்கிட உதவிபுரிவார்.
மேலும் இவர் மன்றத்தின் சர்வதேச விரிவாக்க நடவடிக்கைகளுக்கு இந்தியா, ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகளில் புதிய மையங்களை ஏற்படுத்திடவும் தலைமை தாங்கிடுவார்.
2007-ம் ஆண்டு உலகப் பொருளாதார மன்றத்தில் இணைந்த நய்யார், நுகர்வோர் தொழிற்சாலைகளுடன் இணக்கத்தை ஏற்படுத்தும் பொறுப்புகளை கொண்ட பல்வேறு இயக்குநர் பதவிகளான தொழிற்சாலைப் பிரிவின் துணைத் தலைவர், உலகப் பொருளாதார மன்றத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை இயக்க அதிகாரி போன்ற பதவிகளை வகித்துள்ளார்.