உலகம் முழுவதும் அக்டோபர் 24-ம் தேதி உலக போலியோ தினமானது போலியோ நோயால் ஏற்படும் தீமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அனுசரிக்கப்படுகின்றது.
2018 ஆம் ஆண்டிற்கான உலக போலியோ தினத்தின் கருத்துரு : ”தற்பொழுதே போலியோவை நிறுத்துங்கள்” என்பதாகும்.
இந்த தினம், 1955 ஆம் ஆண்டில் போலியோமெயிலிட்டிஸ் அல்லது போலியோவிற்கென்று முதலாவது வெற்றிகரமான தடுப்பு மருந்தைக் கண்டறிந்த ஜோனஸ் சால்க் என்ற அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சியாளர் மற்றும் வைரஸ் நிபுணரின் பிறந்த தினத்தை நினைவுபடுத்துகின்றது.
உலக சுகாதார நிறுவனத்தின் படி 1988 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட உலகளாவிய போலியோ ஒழிப்புத் திட்டம் 99 சதவிகிதம் அளவிற்கு போலியோவை ஒழித்திருக்கின்றது.
தற்போதைய நிலவரப்படி, உலக நாடுகளில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் நைஜிரியா ஆகிய நாடுகளில் மட்டுமே போலியோ நோய் இருக்கின்றது.
போலியோவை ஒழிப்பதற்கு 2 வகையிலான தடுப்பு மருந்துகள் உள்ளன.
வாய் வழியிலான போலியோ தடுப்பு மருந்து
வீரியம் அழிக்கப்பட்ட போலியோ தடுப்பு மருந்து
வாய்வழியிலான போலியோ தடுப்பு மருந்து ஆல்பர்ட் சபீன் என்பவரால் உருவாக்கப்பட்டது.