இத்தினமானது குழந்தைகளைப் பாதுகாப்பதில் போலியோ தடுப்பு மருந்தின் பெரும் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
வாய்வழியிலான போலியோ தடுப்பு மருந்தானது போலியோவிலிருந்து பாதுகாப்பதில் மிகவும் பயனுள்ள வழியாக உள்ளது.
1988 ஆம் ஆண்டில், ரோட்டரி இன்டர்நேஷனல் மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவை உலகளாவிய போலியோ ஒழிப்பு முன்னெடுப்பினை (GPEI) நிறுவின.
இந்தியாவானது போலியோ இல்லாத 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது மற்றும் இந்தியாவில் போலியோ பாதிப்பானது கடைசியாக 2011 ஆம் ஆண்டில் பதிவானது.
2023 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு என்பது, "தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான எதிர்காலம்" ஆகும்.