ஜோனாஸ் சால் என்பவரின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் ரோட்டரி இன்டர்நேஷனல் அமைப்பானது இந்தத் தினத்தினை நிறுவியது.
ஜோனாஸ் சால்க் என்பவர் 1950 ஆம் ஆண்டுகளில் போலியோ நோய்க்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கிய முதல் குழுவிற்குத் தலைமை வகித்தவர் ஆவார்.
1955 ஆம் ஆண்டில், செயலிழப்பு செய்யப்பட்ட போலியோ வைரஸ் தடுப்பூசியை அவர் உருவாக்கினார்.
1962 ஆம் ஆண்டில், ஆல்பர்ட் சபின் என்பவர் வாய்வழி ரீதி போலியோ தடுப்பூசியை உருவாக்கினார்.
1978 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் பிரத்தியேக வாய்வழி போலியோ சொட்டு மருந்து பயன்படுத்த ப்படுகிறது.
1988 ஆம் ஆண்டில், போலியோ வைரஸை ஒழிப்போம் என்று உலக சுகாதார அமைப்பு உறுதியளித்தது என்ற நிலையில் அந்த நேரத்தில், உலகம் முழுவதும் சுமார் 3,50,000 போலியோ பாதிப்புகள் பதிவாகியிருந்தன.