TNPSC Thervupettagam

உலக போலியோ தினம் - அக்டோபர் 24

October 27 , 2019 1799 days 558 0
  • போலியோ நோய் மற்றும் அதன் ஒழிப்பு முயற்சிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் அக்டோபர் 24 அன்று உலக போலியோ தினம் கொண்டாடப் படுகின்றது.
  • உலக போலியோ தினம் 2019 இன் கருப்பொருள் “முன்னேற்றக் கதைகள்: உலக போலியோ தினத்திற்கான கடந்த காலமும் நிகழ்காலமும்”.
  • பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் போலியோ இன்னும் பரவலாக உள்ளது.
  • இந்தியாவில் கடைசியாக பதிவு செய்யப்பட்ட போலியோவின் நிலை  2011 ஜனவரி ஆகும்.
  • இந்தியாவின் மேற்கு வங்காளத்தில்  கடைசியாக கண்டறியப்பட்ட கொடிய போலியோ வைரஸ் தொற்று ஏற்பட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 2014 ஆம் ஆண்டில் SEAR (South East Asian Region - தென்கிழக்கு ஆசியப் பிராந்தியம்) நாடுகள் போலியோ இல்லாத நாடுகள் என அறிவிக்கப் பட்டுள்ளன.
  • நைஜீரியா 2015 ஆம் ஆண்டு செப்டம்பர்  மாதத்தில் போலியோ தாக்கம் அதிகம் உள்ள நாடுகளின்   பட்டியலிலிருந்து நீக்கப் பட்டது.
  • சர்வதேச போலியோ ஒழிப்பு முயற்சியானது பின்வரும் 5 அமைப்புகளான  “உலக சுகாதார அமைப்பு, ரோட்டரி இன்டர்நேஷனல், அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள், ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதி (யுனிசெஃப்) மற்றும் பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை ஆகியவற்றுடன் நாடுகளின் தேசிய அரசுகளும் ஒரு பொது-தனியார் பங்குதார முறையில் இணைந்து  மேற்கொண்ட ஒரு முயற்சியாகும். 
  • போலியோ என்பது ஒரு அதிகம் தொற்றக் கூடிய  நோய் ஆகும்.
  • இது பொதுவாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளைப் பாதிக்கும் கொடிய ‘போலியோ வைரஸ்’ காரணமாக ஏற்படும் நோய் ஆகும்.
  • கொடிய போலியோ வைரஸ் (Wild Polio Virus - WPV) எனப்படும் போலியோ வைரஸில் மூன்று விகாரங்கள் உள்ளன.
  • கொடிய போலியோ வைரஸ் 3 என்ற வகையால் கடைசியாக ஏற்பட்ட பாதிப்பு 2012 ஆம் ஆண்டில் வடக்கு நைஜீரியாவில் காணப்பட்டது.
  • 2015 ஆம் ஆண்டில் கொடிய போலியோ வைரஸ் வகை 2 நீக்கப்பட்டதாக அறிவிக்கப் பட்டது - இது நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட இரண்டாவது கொடிய போலியோ வைரஸ் வகை ஆகும்.
  • மூன்று கொடிய போலியோ வைரஸ்களில் இரண்டு நீக்கப்பட்ட நிலையில், கொடிய போலியோ வைரஸ் வகை 1 மட்டுமே இன்னும் புழக்கத்தில் உள்ளது. இது ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளில் மட்டுமே இன்னும் காணப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்