TNPSC Thervupettagam

உலக ப்ரீ-டயாபட்டீஸ் (நீரிழிவுக்கு முந்தைய நிலை) தினம் – ஆகஸ்ட் 14

August 18 , 2021 1107 days 389 0
  • 2021 ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 14 ஆம் தேதியானது உலகம் முழுவதும் உலக ப்ரீ-டயாபட்டீஸ் (Prediabetes) தினமாக அனுசரிக்கப்படும்.
  • இத்தினமானது ப்ரீ-டயாபட்டீஸ் குறித்த ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்துவதையும் நீரிழிவு நோயின் அதிகரிப்பு வீதத்தினைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதியானது முதலாவது உலக ப்ரீ-டயாபட்டீஸ் தினமாகும்.
  • உலக நீரிழிவு நோய் தினத்திற்கு (நவம்பர் 14) 90 நாட்கள் முன்பாக இத்தினமானது தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
  • நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையை மாற்றுவதற்கும் அது மேன்மேலும் முன்னேறி முழுமையான நீரிழிவு நிலையை அடைவதைத் தடுப்பதற்கும் ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றுவதற்கு அறிவியல் ரீதியாக 90 நாட்கள் தேவைப்படும் என்பதே இதற்கான ஒரு காரணமாகும்.
  • ப்ரீ-டயாபட்டீஸ் என்பது இரத்தத்தின் சர்க்கரை அளவு அதன் இயல்பான அளவை விட சற்று அதிகமாக இருப்பதும்,  ஆனால் 2 ஆம் வகை நீரிழிவு நோயாக (மோசமான வாழ்க்கை முறையில் உருவான) வகைப்படுத்தப்படும் அளவிற்கு இல்லாத வகையிலும் உள்ள ஒரு உடல்நிலை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்