TNPSC Thervupettagam

உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி 2023

April 8 , 2023 595 days 309 0
  • இந்திய மகளிர் குத்துச்சண்டை வீராங்கனைகள், IBA உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் நான்கு தங்கப் பதக்கங்களை வென்று மீண்டும் வரலாறு படைத்துள்ளனர்.
  • நிது கங்காஸ் (48 கிலோ எடைப் பிரிவு), நிகத் ஜரீன் (50 கிலோ எடைப்பிரிவு), லோவ்லினா போர்கோஹைன் (75 கிலோ எடைப் பிரிவு), சவீதி பூரா (81 கிலோ எடைப் பிரிவு) ஆகியோர் தங்கம் வென்றனர்.
  • சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கப் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இடம் பெற்றது.
  • உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா நான்கு தங்கப் பதக்கங்களை வென்றது வரலாற்றில் இது இரண்டாவது முறையாகும்.
  • 2006 ஆம் ஆண்டில் மேரி கோம், சரிதா தேவி, ஜென்னி லால்ரெம்லியானி மற்றும் K.C. லேகா ஆகியோர் தங்கம் வென்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்