TNPSC Thervupettagam

உலக மகிழ்ச்சி அறிக்கை – 2018

March 18 , 2018 2316 days 718 0
  • ஐ.நா-வின் நீடித்த மேம்பாட்டுத் தீர்வைப் பிணைய (United Nations Sustainable Development Solutions Network – UN SDSN) அமைப்பால் அண்மையில் வெளியிடப்பட்ட 2018-ஆம் ஆண்டிற்கான உலக மகிழ்ச்சி அறிக்கையில் 156 நாடுகளுள் இந்தியா 133-வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • 2012-ஆம் ஆண்டு முதன் முதலாக வெளியிடப்பட்ட உலக மகிழ்ச்சி அறிக்கையின் 6-வது பதிப்பு இவ்வாண்டு வெளியிடப்பட்டுள்ளது.
  • சார்க் நாடுகளுள் 145-வது இடத்தில் உள்ள ஆப்கானிஸ்தானைத் தவிர பிற அனைத்து சார்க் உறுப்பு நாடுகளும் இந்தியாவைக் காட்டிலும் முன்னிடத்தில் தரவரிசையைப் பெற்றுள்ளன.
  • இந்தியாவின் அண்டை நாடுகளான பூடான் 97-வது இடத்திலும், வங்கதேசம் 115-வது இடத்திலும், நேபாளம் 101-வது இடத்திலும், இலங்கை 116-வது இடத்திலும், பாகிஸ்தான் 75-வது இடத்திலும் உள்ளன.
  • சமத்துவமின்மை (Inequality) ஆயுள் எதிர்பார்ப்பு (life expectancy) தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி, சமூக சுதந்திரம், பொது நம்பிக்கை, சமூக ஆதரவு, உயர் பண்புடைமை (generosity) போன்ற பல்வேறு அளவுருக்களின் அடிப்படையில் 156 நாடுகள் உலக மகிழ்ச்சி அறிக்கையில் மதிப்பிடப்பட்டுள்ளன.
  • பின்லாந்து, நார்வே, டென்மார்க், ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, கனடா, நியூசிலாந்து, சுவீடன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களில் உள்ளன.
  • இந்த அறிக்கையில் மகிழ்ச்சியான குடியேறிகள் (Happiest immigrants) உடைய நாடுகள், பொதுவாக மகிழ்ச்சியான மக்கள்தொகை உடைய நாடுகள் எனும் இருவகைப் பிரிவின் தரவரிசையிலும், பின்லாந்து முதல் இடத்தில் உள்ளது.
  • இந்த அளவுருக்களின் பயன்பாட்டைக் கொண்டு 1 முதல் 10 வரையிலான மதிப்பெண் அளவீட்டின் மீது உலக நாடுகளின் மகிழ்ச்சி மதிப்பெண்கள் (Happy Scores) கணக்கிடப்பட்டுள்ளன.
  • 2018-ஆம் ஆண்டிற்கான உலக மகிழ்ச்சி அறிக்கையில் முதல் முறையாக 117 நாடுகளில் உள்ள அயல்நாட்டில் பிறந்த குடியேறிகளின் மகிழ்ச்சி கணக்கிடப்பட்டுள்ளது.
  • உலக நாடுகளின் மகிழ்ச்சி நிலை குறித்த ஒட்டுமொத்த தரவரிசையானது,  உலக அளவிலான மாற்றம் மற்றும் நிலைத்தன்மையை  வெளிக்காட்டுகின்ற 2015 முதல் 2017-ஆம் ஆண்டு வரையிலான Gallup World Poll Survey-வின் கூட்டு முடிவுகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்