இது ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான மேம்பாட்டுத் தீர்வுகள் வலை அமைப்பு என்பதினால் வெளியிடப்பட்டது.
பின்லாந்து, தொடர்ந்து ஆறாவது ஆண்டாக உலகின் மகிழ்ச்சியான நாடாக தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
ஆறு வெவ்வேறு காரணிகள் ஒரு நாட்டின் மகிழ்ச்சியின் அளவைத் தீர்மானிக்கச் செய்ன்றன.
ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நபர் வருமானம், சமூக ஆதரவு, ஆரோக்கியமான ஆயுட்காலம், சுதந்திரம், பெருந்தன்மை மற்றும் குறைந்த ஊழல் ஆகியவை இதில் அடங்கும்.
2022 ஆம் ஆண்டில் 136 ஆக இருந்த இந்தியாவின் தரவரிசையானது 2023 ஆம் ஆண்டில் 126வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இலங்கை (112), பாகிஸ்தான் (108), நேபாளம் (78), சீனா (64) போன்ற நெருங்கிய அண்டை நாடுகளுக்கு அடுத்த இடத்தில் தான் இந்தியா இன்னும் உள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் 92வது இடத்திலும், தலிபான் ஆட்சியின் கீழான ஆப்கானிஸ்தான் கடைசி இடத்திலும் (137வது) உள்ளன.