TNPSC Thervupettagam

உலக மகிழ்ச்சி அறிக்கை 2023

March 25 , 2023 611 days 1491 0
  • இது 10வது உலக மகிழ்ச்சி அறிக்கையாகும்.
  • இது ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான மேம்பாட்டுத் தீர்வுகள் வலை அமைப்பு என்பதினால் வெளியிடப்பட்டது.
  • பின்லாந்து, தொடர்ந்து ஆறாவது ஆண்டாக உலகின் மகிழ்ச்சியான நாடாக தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
  • ஆறு வெவ்வேறு காரணிகள் ஒரு நாட்டின் மகிழ்ச்சியின் அளவைத் தீர்மானிக்கச் செய்ன்றன.
  • ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நபர் வருமானம், சமூக ஆதரவு, ஆரோக்கியமான ஆயுட்காலம், சுதந்திரம், பெருந்தன்மை மற்றும் குறைந்த ஊழல் ஆகியவை இதில் அடங்கும்.
  • 2022 ஆம் ஆண்டில் 136 ஆக இருந்த இந்தியாவின் தரவரிசையானது 2023 ஆம் ஆண்டில் 126வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
  • இலங்கை (112), பாகிஸ்தான் (108), நேபாளம் (78), சீனா (64) போன்ற நெருங்கிய அண்டை நாடுகளுக்கு அடுத்த இடத்தில் தான் இந்தியா இன்னும் உள்ளது.
  • போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் 92வது இடத்திலும், தலிபான் ஆட்சியின் கீழான ஆப்கானிஸ்தான் கடைசி இடத்திலும் (137வது) உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்