சேப்பியன் லேப்ஸ் நிறுவனமானது, தனது மூன்றாவது வருடாந்திர உலக மக்களின் மன நிலை குறித்த அறிக்கையினை (MSW) வெளியிட்டுள்ளது.
பெருந்தொற்றுக் காலத்தின் போது மனநலக் குறைவு பாதிப்பில் சிறிதளவே மீட்சி ஏற்பட்டுள்ளதாக இந்த அறிக்கை கண்டறிந்துள்ளது.
இக்குழுவானது "மனநல ஈவு (குறிப்பீடு)" எனப்படும் மதிப்பெண் மூலம் மக்களின் மன நிலை குறித்து மதிப்பிடுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் சராசரி மதிப்பெண் 33 புள்ளிகள் குறைந்துள்ளது. இருப்பினும் இன்னும் மீட்சிக்கான அறிகுறிகள் வெளிப்படவில்லை.
18 முதல் 24 வயதிற்குட்பட்டவர்களும் குறைவான "சமூக சுய மதிப்பீட்டினை" கொண்டு இருந்தனர்.
இது ஒரு நபர் தன்னைப் பற்றி எவ்வாறு உணர்கிறார் மற்றும் அர்த்தமுள்ள உறவுகளைப் பேணுவதற்கான ஒரு நபரின் திறனை அளவிடும் அளவீடாகும்.
உலக சராசரி மனநல ஈவானது 64 ஆக உள்ளது.
தான்சானியா, பனாமா, புயுரிட்டோ ரிக்கோ, டொமினிகன் குடியரசு மற்றும் வெனிசுலா ஆகியவை மனநல ஆரோக்கியத்தில் முதல் 5 இடங்களைப் பெற்ற நாடுகளாகும்.
பிரிட்டன், அயர்லாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் மனநலத் தரவரிசையில் கடைசி இடங்களைப் பெற்ற நாடுகள் ஆகும்.
இதில் இந்தியா 49வது இடத்திலும், பாகிஸ்தான் 48வது இடத்திலும் உள்ளன.
பெரு, இந்தியா, பொலிவியா ஆகிய நாடுகளில் 55-64 வயதுடையவர்களுடன் ஒப்பிடச் செய்கையில், 18-24 வயதுடைய 42% இளைஞர்கள் மனநலம் பாதிக்கப் பட்டவர்களாக அல்லது மன நலம் பேணும் ஒரு முயற்சியில் போராடிக் கொண்டு இருப்பவர்களாக உள்ளனர் என்று இந்த அறிக்கை கூறுகிறது.
இந்த அறிக்கையில் சீனா பற்றிய விவரங்கள் எதுவும் இடம் பெறவில்லை.