உலக மக்கள் தொகை தினமானது ஜூலை 11 அன்று கடைபிடிக்கப் படுகின்றது.
இது மக்கள் தொகையின் பிரச்சினைகளின் முக்கியத்துவம் மற்றும் அவசர நிலை குறித்து கவனம் செலுத்த முற்படுகின்றது.
இது 1989 ஆம் ஆண்டில் ஐ.நா. மேம்பாட்டுத் திட்டத்தின் அப்போதைய ஆளுமைக் குழுவால் நிறுவப்பட்டது.
இந்த நாளானது முதன்முதலில் 1990 ஆம் ஆண்டு ஜூலை 11 அன்று கடைபிடிக்கப்பட்டது.
இவ்வருடம் கருத்துருக்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.
1994 ஆம் ஆண்டு மக்கள் தொகை மற்றும் மேம்பாடு மீதான சர்வதேச மாநாட்டின் குறிக்கோள்களில் எட்டப்படாத தீர்மானங்களின் மீது உலகளாவிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என்ற அழைப்பை விடுத்துள்ளது.