TNPSC Thervupettagam

உலக மக்கள் தொகை தினம் – ஜூலை 11

July 12 , 2023 504 days 396 0
  • உலக மக்கள்தொகை வளர்ச்சியுடன் தொடர்புடைய பல்வேறு பிரச்சனைகள் மற்றும் சவால்கள் பற்றி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அரசாங்கங்கள் ஒன்றிணைந்து, இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கானப் பல்வேறு நிலையானத் தீர்வுகளைக் கண்டறியச் செய்வதற்கான நினைவூட்டலாக இந்தத் தினம் செயல்படுகிறது.
  • இந்தத் தினமானது, ஐக்கிய நாடுகள் சபையினால் 1989 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • 2023 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, “பாலினச் சமத்துவத்தின் மீதான ஆற்றலினைக் கட்டவிழ்த்து விடுதல் : நமது உலகிலுள்ள எல்லையற்ற சாத்தியக் கூறுகளை வெளிக் கொணர்வதற்காக பெண்கள் மற்றும் சிறுமிகளின் குரல்களை மேம்படுத்துதல்” என்பதாகும்.
  • 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் உலக மக்கள் தொகையின் மதிப்பீடுகள் மற்றும் கணிப்புகளின்படி, இந்தியாவில் 1,42.58 கோடி மக்கள் உள்ளனர்.
  • இந்தியாவின் மக்கள்தொகையானது 1,425,775,850 என்ற ஒரு எண்ணிக்கையினைத் தாண்டியதால், உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக விளங்கிய சீனா பின் தள்ளப்பட்டது.
  • இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் சீன மக்கள்தொகை குறைந்து, ஒரு பில்லியனுக்கும் கீழே குறையக் கூடும்.
  • 1950 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் அமெரிக்காவின் மக்கள் தொகை 15.1 கோடியில் இருந்து 30.9 கோடியாக இரட்டிப்பாகியுள்ளது.
  • 2020 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு முடிவுகளின்படி, இந்தோனேசிய நாட்டின் இளம் மக்கள் தொகையின் சராசரி வயது 30 ஆக உள்ளது.
  • மக்கள்தொகை அடிப்படையில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்