TNPSC Thervupettagam

உலக மக்கள்தொகை வளங்கள் 2022

July 15 , 2022 739 days 386 0
  • 1951 ஆம் ஆண்டு முதல் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக மக்கள்தொகை வளங்கள் அறிக்கையினை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டு வருகிறது.
  • 2050 ஆம் ஆண்டு வரையில், உலக மக்கள்தொகையில் ஏற்படும் பாதிக்கும் மேலான உயர்வானது வெறும் எட்டு நாடுகளில் மட்டுமே நிகழும்.
  • இவை, காங்கோ ஜனநாயகக் குடியரசு, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் மற்றும் தான்சானியா ஐக்கியக் குடியரசு ஆகியனவாகும்.
  • 2022 ஆம் ஆண்டில் உலக மக்கள்தொகையில் 10 சதவீதமாக உள்ள 65 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதினரின் பங்கு  2050 ஆம் ஆண்டில் 16% ஆக உயரும் என்று கணிக்கப் பட்டுள்ளது.
  • அடுத்த சில தசாப்தங்களில், அதிக வருமானம் கொண்ட நாடுகளில் ஏற்பட உள்ள மக்கள் தொகை வளர்ச்சிக்கு இடம்பெயர்வு மட்டுமே முக்கிய உந்துதலாக இருக்கும்.
  • தற்போது ஈடு செய்வதற்கான கருவுறுதல் விகிதத்தை இந்தியா அடைந்துள்ளது
  • இது மக்கள் தொகையானது ஒரு தலைமுறையிலிருந்து அடுத்தத் தலைமுறைக்கு ஒட்டு மொத்தமாக பதிலீடு செய்கின்ற ஒரு விகிதமாகும்.
  • 0 முதல் 14 வயது மற்றும் 15 முதல் 24 வயதுடையவர்களின் மக்கள்தொகையானது தொடர்ந்து குறையச் செய்யும்.
  • வரவிருக்கும் பத்தாண்டுகளில் 25 முதல் 64 வரையில் மற்றும் 65க்கும் மேற்பட்ட வயதினரின் எண்ணிக்கையானது தொடர்ந்து உயரும்.
  • ஏற்கனவே 25 முதல் 64 வயதிற்குட்பட்டவர்களுக்கு, அவர்கள் அதிக உற்பத்தித் திறன் மற்றும் சிறந்த வருமானம் இருப்பதை உறுதி செய்வதற்கான ஒரே வழிவகையாக திறன் மேம்பாட்டின் தேவை உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்