இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, ‘மண்ணும் நீரும், வாழ்வின் ஆதாரம்’ என்பதாகும்.
இத்தினம் சர்வதேச மண் அறிவியல் சங்கத்தின் (IUSS) முயற்சியால் நிறுவப்பட்டது.
2002 ஆம் ஆண்டில் சர்வதேச மண் அறிவியல் சங்கமானது, 2002 ஆம் ஆண்டில் மண்ணின் சிறப்பைக் கொண்டாடுவதற்காக ஒரு சர்வதேச தினத்தை நிறுவுவதற்குப் பரிந்துரைத்தது.
தாய்லாந்து இராட்சியத்தின் தலைமைத்துவத்துடனும், உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) ஆதரவுடனும், உலகளாவிய மண் கூட்டாண்மை கட்டமைப்பிற்குள் உலக மண் தினம் ஓர் உலகளாவிய விழிப்புணர்வுத் தளமாக உருவானது.
தாய்லாந்து மன்னர் பூமிபால் அதுல்யதேஜ் அவர்களின் பிறந்தநாளை ஒட்டி டிசம்பர் 05 ஆம் தேதியானது இத்தினத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
2013 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், உணவு மற்றும் வேளாண் அமைப்பின் மாநாடு ஆனது, உலக மண் தினத்தை அங்கீகரித்து, பின்னர் 68வது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையை அணுகி அதனை அதிகாரப் பூர்வமாக ஏற்றுக் கொள்ள கோரியது.
குன்மிங்-மாண்ட்ரியல் உலகப் பல்லுயிர் கட்டமைப்பானது, பல்லுயிர் இழப்பைத் தடுத்து நிறுத்துவதற்கும் அதனை மீட்டெடுப்பதற்குமான அவசர நடவடிக்கைகளை எடுப்பதற்கான ஒரு திட்டமாகும்.