உலக மண் தினமானது ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 05 ஆம் தேதியன்று ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பால் (Food and Agriculture Organization) அனுசரிக்கப்படுகிறது.
இது உணவுப் பாதுகாப்பு, வளமான சூழலியமைப்புகள் மற்றும் மனித நல்வாழ்வுக்காக மண்ணின் முக்கியத்துவத்தை தெரிவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இவ்வருட உலக மண் தினத்தின் கருத்துரு: “மண் மாசுபாட்டிற்கு தீர்வாக இரு” (Be the Solution to Soil Pollution) என்பதாகும்.
2002-ல் மண் அறிவியலுக்கான சர்வதேச மன்றத்தால் (International Union of Soil Sciences-IUSS) இத்தினம் முன்மொழியப்பட்டு 2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற 68-வது ஐ.நா. பொதுச் சபையில் டிசம்பர் 5ஆம் தேதி உலக மண் தினமாக அறிவிக்கப்பட்டது.