TNPSC Thervupettagam

உலக மண் தினம் – டிசம்பர் 5

December 6 , 2017 2575 days 1124 0
  • உலக மண் தினம் ஆண்டுதோறும் உலகம் முழுவதும் டிசம்பர்-5 ஆம் தேதி ரோம் நகரை தலைமையிடமாகக் கொண்ட ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பால் [UN – FAO] கொண்டாடப்படுகின்றது.
  • 2017-ஆம் ஆண்டிற்கான உலக மண் தினத்தின் கருத்துரு Þ “நிலத்திலிருந்து தொடங்கி பூமியின் மீது அக்கறை கொள்ளல்”
  • [Caring for the Planet starts from the ground].
  • மனித நல்வாழ்வு, உணவுப் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியமான சுற்றுச்சூழல் போன்றவற்றிற்கு தரமுடைய மண் வளத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இத்தினம் கடைபிடிக்கப் படுகின்றது.
  • மனித நல்வாழ்வினிற்கு முக்கிய பங்கெடுப்பாளராகவும், இயற்கை சுற்றுச்சூழல் முறையின் முக்கிய பகுதியாகவும் உள்ள மண்ணின் முக்கியத்துவத்தை கொண்டாடுவதற்காக 2002 ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதியை உலக மண் தினமாக கொண்டாட மண் அறிவியலுக்கான சர்வதேச சங்கத்தில் [International Union for Soil Science-IUSS] தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
  • பின் 2013-ல் UN-FAO மாநாட்டில் உலக மண் தினத்திற்கு ஒருமனதாக ஆமோதிப்பு அளிக்கப்பட்டு 68-வது ஐ.நா. பொது அவை மாநாட்டிற்கு அதிகாரப்பூர்வமாக பரிந்துரைக்கப்பட்டது.
  • பின் 68-வது பொது அவை மாநாட்டில் டிசம்பர் 5 ஆனது உலக மண் தினமாக அறிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்