உலக மண் தினம் ஆண்டுதோறும் உலகம் முழுவதும் டிசம்பர்-5 ஆம் தேதி ரோம் நகரை தலைமையிடமாகக் கொண்ட ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பால் [UN – FAO] கொண்டாடப்படுகின்றது.
2017-ஆம் ஆண்டிற்கான உலக மண் தினத்தின் கருத்துரு Þ “நிலத்திலிருந்து தொடங்கி பூமியின் மீது அக்கறை கொள்ளல்”
[Caring for the Planet starts from the ground].
மனித நல்வாழ்வு, உணவுப் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியமான சுற்றுச்சூழல் போன்றவற்றிற்கு தரமுடைய மண் வளத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இத்தினம் கடைபிடிக்கப் படுகின்றது.
மனித நல்வாழ்வினிற்கு முக்கிய பங்கெடுப்பாளராகவும், இயற்கை சுற்றுச்சூழல் முறையின் முக்கிய பகுதியாகவும் உள்ள மண்ணின் முக்கியத்துவத்தை கொண்டாடுவதற்காக 2002 ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதியை உலக மண் தினமாக கொண்டாட மண் அறிவியலுக்கான சர்வதேச சங்கத்தில் [International Union for Soil Science-IUSS] தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
பின் 2013-ல் UN-FAO மாநாட்டில் உலக மண் தினத்திற்கு ஒருமனதாக ஆமோதிப்பு அளிக்கப்பட்டு 68-வது ஐ.நா. பொது அவை மாநாட்டிற்கு அதிகாரப்பூர்வமாக பரிந்துரைக்கப்பட்டது.
பின் 68-வது பொது அவை மாநாட்டில் டிசம்பர் 5 ஆனது உலக மண் தினமாக அறிவிக்கப்பட்டது.